» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளச் சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 10:51:26 AM (IST)

தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் கிராமத்தில், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பெரிய சாரைப்பாம்பால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் கிராமம் வடக்கு தெருவில் வசிப்பவர் பொன்செல்வம். இவரது வீட்டின் சமையலறைக்குள் இன்று திடீரென 6 அடி நீளமுள்ள பெரிய சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அலறியடித்தபடி வீட்டை விட்டு வெளியேறி கதவைப் பூட்டினர்.
உடனடியாக இது குறித்துச் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
சமையலறையில் பதுங்கி இருந்த அந்தப் பாம்பைத் தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு லாவகமாகப் பிடித்து மீட்டனர். பிடிபட்ட பாம்பு பின்னர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. பாம்பை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்குப் பொன் செல்வத்தின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் நன்றிகளைத் தெரிவித்தனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 102 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம்: அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 3, மார்ச் 2026 11:58:07 AM (IST)

சிவஞானபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா
செவ்வாய் 3, மார்ச் 2026 10:21:30 AM (IST)

ஆழ்வார்திருநகரி கோயில் மாசித் திருவிழாவில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 3, மார்ச் 2026 8:17:14 AM (IST)

தீப்பெட்டி குடோனில் தீ விபத்து: ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
செவ்வாய் 3, மார்ச் 2026 8:12:59 AM (IST)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மார்ச் 23-ல் தீர்ப்பு: மதுரை நீதிமன்றம் அறிவிப்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 8:07:02 AM (IST)

பூனை குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் உயிரிழப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 7:50:52 AM (IST)