» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது!

செவ்வாய் 3, மார்ச் 2026 3:38:38 PM (IST)

திருநெல்வேலியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி டவுன் ஜங்ஷன், கைலாசபுரம் ஆற்று படுகை அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாகித் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த ஒரு வாலிபரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

விசாரணையில் அவர் திருநெல்வேலி சந்திப்பு, முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் இசக்கிபாண்டி (24) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய சோதனையில், விற்பனைக்காக வைத்திருந்த உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 80 கிராம் கஞ்சாவை போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இசக்கிபாண்டியை கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory