» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனைத்து தொகுதிகளிலும் சமச்சீர் வளர்ச்சி: அமைச்சர் பி.கீதா ஜீவன் பெருமிதம்

திங்கள் 2, மார்ச் 2026 10:33:20 AM (IST)


முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து தொகுதிகளிலும் சமச்சீர் வளர்ச்சி அடைந்துள்ளதாக அமைச்சர் பி.கீதா ஜீவன் கூறினார். 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றுப் பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் திமுக ஆட்சியில் சமச்சீர் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். 

கடந்த அதிமுக ஆட்சியில் முடங்கிக் கிடந்த பொருளாதாரத்தை மீட்டு, தற்போது தமிழகத்தின் வளர்ச்சியை 11.9 சதவீதமாக முதல்வர் உயர்த்தியுள்ளார் என்றும், இதற்குச் சான்றாக வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் நமது மாவட்டத்தில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் உயர்கல்வி ஊக்குவிக்கப்பட்டதால் தமிழகத்திலிருந்து 52 பேர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மகளிர் உரிமைத் தொகை மற்றும் விடியல் பயணம் போன்ற திட்டங்களால் பெண்களின் சேமிப்பு உயர்ந்து தனிநபர் வருமானம் 3.5 லட்சமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கீழடி மற்றும் சிவகளை அகழ்வாராய்ச்சிகள் மூலம் தமிழர்களின் 3000 ஆண்டுகாலப் பெருமையை உலகறியச் செய்யும் முயற்சியில் முதல்வர் ஈடுபட்டுள்ளதை விளக்கிய அமைச்சர், தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் முதல்வருக்கு மக்கள் என்றும் துணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இவ்விழாவிற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன், ஐகோர்ட் மூர்த்தி, சங்கர் ஜெகதீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், வட்டச் செயலாளர் சிங்கராஜ் மற்றும் பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாநகர வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரூபராஜா, ரெக்ஸ், கவுன்சிலர் சரவணக்குமார் மற்றும் வட்டப் பிரதிநிதிகள் பாஸ்கர், துரை, மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory