» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி இளைஞர் கொலை வழக்கு: மேலும் 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது!
திங்கள் 2, மார்ச் 2026 8:44:45 AM (IST)
கோவில்பட்டியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 2-வது மேலத்தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (எ) மனோஜ் (18). பிளம்பிங் மற்றும் மின்சார வேலை செய்து வந்த இவர், கடந்த வியாழக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, அரிவாள் மற்றும் கத்தியால் மனோஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.
படுகாயமடைந்த மனோஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை அவர் உயிரிழந்தார். இந்தக் கொலை குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், தற்போது வள்ளுவர் நகரைச் சேர்ந்த சரவணன் மகன் சிவபிரசாத் (19) என்பவரும், செண்பகா நகர், புது கிராமம் மற்றும் கடலையூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 17 வயதுடைய 3 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் சின்னம் பட்டியல்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:12:53 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் 1868 ஆக உயர்வு: இறுதி பட்டியலில் 13.88 லட்சம் வாக்காளர்கள்..!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 4:57:32 PM (IST)

மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் அமல்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:49:01 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் ஒப்படைப்பு : ஆட்சியர் தகவல்
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:44:04 PM (IST)

காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:08:02 PM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: வேட்பாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ., பிரச்சாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST)







