» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமணமான ஒரே வாரத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை: போலீசார் விசாரணை

திங்கள் 2, மார்ச் 2026 8:30:37 AM (IST)

நாலாட்டின்புத்தூர் அருகே திருமணமான ஒரே வாரத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீக்கிலிப்பட்டி மேற்கு காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி பெருமாள். இவரது மகன் ராமராஜ் (27). இவர் கோவில்பட்டியில் தள்ளுவண்டி கடை வைத்து சமோசா வியாபாரம் செய்து வந்தார். இவருக்கும் மனிஷா (20) என்பவருக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

நேற்று முன்தினம் இரவு ராமராஜ் வழக்கம்போல் தனது குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவைச் சாப்பிட்டார். பின்னர், அவர் தனது மனைவியுடன் அறைக்குச் சென்றார். இரவில் மனிஷா நன்றாக உறங்கிவிட்ட நிலையில், ராமராஜ் உறங்காமல் விழித்திருந்துள்ளார். மறுநாள் காலை மனிஷா எழுந்து பார்த்தபோது, ராமராஜ் வீட்டின் உத்தரத்தில் தூக்கிட்டுப் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் அலறினார்.

தகவல் அறிந்த நாலாட்டின்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், ராமராஜின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தத் தற்கொலைக்கான காரணம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பிரச்சனையா, கடன் தொல்லையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. திருமணமான ஒரே வாரத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பீக்கிலிப்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory