» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்: ஆட்டோ டிரைவர் கைது
திங்கள் 2, மார்ச் 2026 8:11:07 AM (IST)
கோவில்பட்டி அருகே இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கலான்குளம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பூபாண்டி (22). முருகேசன் என்பவரது மகனான இவர், ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். பூபாண்டி, அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவரைப் பின்தொடர்ந்து அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், அந்தப் பெண்ணை அவதூறாகப் பேசியதுடன், அவருக்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட இளம்பெண் இது குறித்து அளித்த புகாரின் அடிப்படையில், கொப்பம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையைத் தொடர்ந்து, இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் பூபாண்டியை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் சின்னம் பட்டியல்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:12:53 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் 1868 ஆக உயர்வு: இறுதி பட்டியலில் 13.88 லட்சம் வாக்காளர்கள்..!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 4:57:32 PM (IST)

மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் அமல்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:49:01 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் ஒப்படைப்பு : ஆட்சியர் தகவல்
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:44:04 PM (IST)

காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:08:02 PM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: வேட்பாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ., பிரச்சாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST)







