» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி: திமுக சார்பில் போட்டியிட ஒன்றியச் செயலாளர் விருப்பமனு தாக்கல்!

திங்கள் 2, மார்ச் 2026 8:02:28 AM (IST)



தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் அ. இளையராஜா இன்று அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்தார்.

தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு அளிக்கலாம் என்று திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, விருப்பமனுத் தாக்கல் செய்யும் பணிகள் அண்ணா அறிவாலயத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான அ. இளையராஜா விருப்பமனு அளித்தார்.

முன்னதாக, அவர் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோரைச் சந்தித்து விருப்பமனு விண்ணப்பப் படிவத்தைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

மூத்த நிர்வாகிகளின் வாழ்த்துகளைப் பெற்ற பின்னர், அண்ணா அறிவாலயத்தில் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளிடம் தனது விருப்பமனுவை அ. இளையராஜா சமர்ப்பித்தார். இந்த நிகழ்வின் போது, ஓட்டப்பிடாரம் தொகுதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory