» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முதல்வர் பிறந்தநாள் விழா: 14 குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் கீதா ஜீவன்!

ஞாயிறு 1, மார்ச் 2026 6:38:25 PM (IST)



தமிழக முதல்வரும், திமுக தலைவருமான  மு.க. ஸ்டாலின் அவர்களின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது.

இதன் முக்கிய நிகழ்வாக, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த 14 குழந்தைகளுக்குத் தலா ஒரு தங்க மோதிரம் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அத்தியாவசியப் பொருட்களை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்டச் செயலாளருமான கீதா ஜீவன் வழங்கினார். முன்னதாக, மாவட்ட முழுவதும் கேக் வெட்டியும், பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் திமுகவினர் உற்சாகமாகக் கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் எஸ்.ஆர். ஆனந்த சேகரன், மாவட்டத் துணை அமைப்பாளர் ராஜ்மோகன் செல்வின், மாவட்ட மருத்துவ அணித் தலைவர் டாக்டர் அருண்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா மற்றும் முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், மாநகராட்சி கவுன்சிலர் இசக்கிராஜா, மாநகரச் சுற்றுச்சூழல் அணித் துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory