» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் : 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை!

ஞாயிறு 1, மார்ச் 2026 6:34:35 PM (IST)



ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் புதியம்புத்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் மு.அனுசியா கட்சிப் பொறுப்பாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். தொடக்க நிகழ்வாக உறுதி மொழியும் மறைந்த சுதந்திரப் போராட்ட  போராளி ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு வீரவணக்கம் செய்து நிகழ்வு தொடங்கப்பட்டது.

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மா.மு. தமிழ்நேயன், சு.அன்னலட்சுமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மண்டலச் செயலாளர் இ.மாரிமுத்து முன்னிலை வகித்தார். கூட்டத்தின் தொடக்கமாகத் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு, தேர்தல் பணிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் தேவராஜ் நன்றியுரை ஆற்றினார். இதில் கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory