» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 73-வது பிறந்தநாள்: 73 கிலோ கேக் வெட்டி திமுகவினர் கொண்டாட்டம்

ஞாயிறு 1, மார்ச் 2026 1:37:23 PM (IST)



தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு இடங்களில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாநகர திமுக சார்பில், பழைய பேருந்து நிலையம் முன்பாக மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் தலைமையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சரின் வயதைக் குறிக்கும் வகையில் 73 கிலோ எடையுள்ள பிரமாண்ட கேக் வைக்கப்பட்டது. மாவட்டத் துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின் கேக்கினை வெட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

தொடர்ந்து, பழைய பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் ஆறுமுகம், மருத்துவ அணித் தலைவர் அருண்குமார், மகளிர் அணிச் செயலாளர் கவிதா தேவி, முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மண்டலத் தலைவர் கலைச்செல்வி திலகராஜ், மாவட்டப் பிரதிநிதி நாராயணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு 20-வது வட்டக் கழகம் சார்பாகப் புதிய பேருந்து நிலையம், செல்வநாயகபுரம், நந்தகோபாலபுரம் ஆகிய பகுதிகளில் மாவட்டப் பிரதிநிதி நாராயணன் தலைமையில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

பொதுக்குழு உறுப்பினர் முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா, மாநகரப் பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பெரியசாமி, சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் பாக்கியராஜ், வட்டச் செயலாளர்கள்ராஜாமணி, கதிரேசன், அணி அமைப்பாளர்கள்மாநகர வர்த்தக அணி வேல்பாண்டி, மகளிர் அணி செல்வி, சீதா, சங்கீதா மற்றும் இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவசுந்தர் இந்நிகழ்வுகளில் பாக முகவர்கள் தனசேகரன், வசந்த், பாலசுப்பிரமணியன், தங்கராஜ், ராஜ்குமார் உட்பட நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்பித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory