» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செல்போனை தந்தை தராததால் வாலிபர் தற்கொலை!
ஞாயிறு 1, மார்ச் 2026 10:40:23 AM (IST)
காயல்பட்டினத்தில், செல்போனை தந்தை தராததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கீழ லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் ஆத்திமுத்து (25). இவர்கள் இருவரும் கூலித் தொழிலாளர்கள். ஆத்திமுத்து அடிக்கடி மது குடித்துவிட்டு, வீட்டில் தனது தந்தையிடம் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஆத்திமுத்து தனது தந்தையிடம் தகராறு செய்து, தனது செல்போனை உடைக்க முயன்றுள்ளார்.
இதைப் பார்த்த மணி, அந்தத் செல்போனை பிடுங்கிப் பத்திரமாக வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆத்திமுத்து, மீண்டும் மது அருந்திவிட்டு வந்து தனது போனைக் கேட்கவே, இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனை அடைந்த ஆத்திமுத்து, தனது வேட்டியால் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையறிந்த மணி மற்றும் உறவினர்கள், அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி ஆத்திமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் சின்னம் பட்டியல்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:12:53 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் 1868 ஆக உயர்வு: இறுதி பட்டியலில் 13.88 லட்சம் வாக்காளர்கள்..!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 4:57:32 PM (IST)

மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் அமல்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:49:01 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் ஒப்படைப்பு : ஆட்சியர் தகவல்
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:44:04 PM (IST)

காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:08:02 PM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: வேட்பாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ., பிரச்சாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST)







