» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இளைஞர் கொலை வழக்கு: 2 சிறார் உள்பட 5 பேர் கைது!
ஞாயிறு 1, மார்ச் 2026 9:11:43 AM (IST)
கோவில்பட்டியில் இளைஞர் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் தொடர்புடையதாக, இரு மாணவர்கள் உட்பட 5 பேரை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 2-ஆவது மேலத் தெருவைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் மாரிமுத்து (எ) மனோஜ் (18). பிளம்பிங் மற்றும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த இவர், கடந்த வியாழக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் 3-ஆவது தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, மனோஜை அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது.
இதில் பலத்த காயமடைந்த மனோஜ், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அவர் உயிரிழந்தார்.
இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கோவில்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களிடையே "யார் பெரியவர்?" என்ற ரீதியில் ஏற்பட்ட மோதல், பின்னர் இரு தரப்பினருக்கிடையேயான பகையாக மாறி இந்தக் கொலையில் முடிந்தது தெரியவந்தது.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக இலுப்பையூரணி மறவர் காலனியைச் சேர்ந்த குமார் (24), துரைசாமிபுரத்தைச் சேர்ந்த முனியசாமி என்ற வேலு (19), திருநெல்வேலி முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த நெல்லையப்பன் (22) மற்றும் மேலப்பாளையம், கோவில்பட்டி முகமது சாலிகாபுரத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் என மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள சிலரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் சின்னம் பட்டியல்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:12:53 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் 1868 ஆக உயர்வு: இறுதி பட்டியலில் 13.88 லட்சம் வாக்காளர்கள்..!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 4:57:32 PM (IST)

மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் அமல்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:49:01 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் ஒப்படைப்பு : ஆட்சியர் தகவல்
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:44:04 PM (IST)

காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:08:02 PM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: வேட்பாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ., பிரச்சாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST)







