» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவில் நாளை தேரோட்டம்!

ஞாயிறு 1, மார்ச் 2026 9:05:57 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை (மார்ச் 2) திங்கள்கிழமை நடைபெறுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8-ஆம் நாளான சனிக்கிழமை காலை, சுவாமி சண்முகர் வெள்ளைச் சாத்தி பெரிய வெள்ளிச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து மேலக்கோயில் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து, முற்பகலில் பச்சை சாத்தி, பச்சைக் கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்த சுவாமி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீண்டும் கோயிலைச் சேர்ந்தார்.

தொடர்ந்து, சுவாமி குமரவிடங்கப் பெருமானும், சுவாமி அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளிக் குதிரை வாகனங்களில் எழுந்தருளி, பாளையங்கோட்டை சாலையில் உள்ள வேட்டை வெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தி, வீதியுலா வந்து மேலக்கோயில் சேர்கின்றனர். அதன்பின்னர், சுவாமி குமரவிடங்கப் பெருமானும், தெய்வானை அம்மனும் பகலில் தனித்தனி பல்லக்கிலும், இரவில் சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் வீதியுலா வருகின்றனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (மார்ச் 2) காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. இதையொட்டி, திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக டி.எஸ்.பி. (DSP) மகேஷ்குமார் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் கனகராஜன், மதுரைவீரன் உள்ளிட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory