» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் மீனவர் உயிரிழப்பு

சனி 28, பிப்ரவரி 2026 5:45:58 PM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயமடைந்த மீனவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி தாளமுத்து நகர் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் அந்தோணி பிச்சை மகன் அந்தோணி சேவியர் (50). மீனவரான இவர், நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றுவிட்டு இரவு கரை திரும்பினார். பின்னர் கடற்கரையிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குப் புறப்பட்டார்.

ராஜபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்தோணி சேவியர் பலத்த காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory