» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துறைமுகங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி: சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது!

சனி 28, பிப்ரவரி 2026 4:41:41 PM (IST)



தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய முக்கிய துறைமுகங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டிதொடரில் சென்னை துறைமுகம் சாம்பியன் பட்டத்தை வென்றது. 

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக மைதானத்தில் கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வந்த அகில இந்திய முக்கிய துறைமுகங்களுக்கு இடையிலான கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை துறைமுக அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென்னை துறைமுக அணியும், போட்டியை நடத்திய வ.உ. சிதம்பரனார் துறைமுக அணியும் மோதின. ஆட்ட நேர முடிவில் சென்னை துறைமுகம் 2 கோல்களை அடித்து முதலிடத்தைப் பிடித்தது. வ.உ. சிதம்பரனார் துறைமுக அணி 1 கோல் அடித்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது. மும்பை துறைமுகம் மற்றும் கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுக அணிகள் கூட்டாக மூன்றாவது இடத்தைப் பிடித்தன.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர்  சர்பானந்த சோனோவால் அவர்களால் பிப்ரவரி 23 அன்று இப்போட்டி தொடங்கி வைக்கப்பட்டது. இத்தொடரில் சென்னை, மும்பை, விசாகப்பட்டினம், மர்மகோவா, தீன்தயாள் (காண்ட்லா), கொச்சி, பாரதீப் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் முக்கிய துறைமுகங்களைச் சேர்ந்த ஒன்பது அணிகள் லீக் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் தலைவர்  சுசந்தா குமார் புரோஹித், தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில் துறைமுகத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரி  கவின் மகாராஜ், துறைமுகச் செயலர்  மோகன் குமார் மற்றும் மூத்த அதிகாரிகள், விளையாட்டு ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory