» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் : உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

சனி 28, பிப்ரவரி 2026 3:49:27 PM (IST)

தூத்துக்குடி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என்று தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு  தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பொன்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் அனுப்பியுள்ள மனுவில், "ஹைதராபாத் (காச்சிகுடா) மற்றும் மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரயிலைத் தூத்துக்குடி வரை நீட்டித்து, அதனை நிரந்தர ரயிலாக மாற்ற ஒப்புதல் வழங்கியதற்காக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்குச் சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

இந்தச் சேவையின் மூலம் தூத்துக்குடி மக்களுக்கு நேரடி வட இந்திய இணைப்பு கிடைத்துள்ளது. தொழில், வர்த்தகம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிமித்தமாகப் பயணிப்போருக்குப் பெரும் உதவியாக அமைந்துள்ளது. தென் மாவட்டங்களுக்கும் தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களுக்கும் இடையே நிலையான போக்குவரத்துத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிலையில், தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் தேவையாக இருக்கும் தூத்துக்குடி - சென்னை வந்தே பாரத் ரயில் சேவை குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் எனச் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory