» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஹைதராபாத் - தூத்துக்குடி இடையே புதிய நேரடி ரயில் சேவை: ரயில்வே வாரியம் ஒப்புதல்
சனி 28, பிப்ரவரி 2026 9:03:19 AM (IST)
ஹைதராபாத் (காச்சிகுடா) மற்றும் மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயிலைத் தூத்துக்குடி வரை நீட்டித்து, அதனை நிரந்தர ரயிலாக மாற்ற இந்திய ரயில்வே வாரியம் முறைப்படி ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.
கொரோனா காலத்திற்கு முன்பிருந்தே காச்சிகுடா - மதுரை இடையே திருவண்ணாமலை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. எனினும், இந்த ரயில் நிரந்தரமாக்கப்படாமல் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ரயிலைத் தூத்துக்குடி வரை நீட்டித்து நிரந்தர சேவையாக மாற்ற ஒப்புதல் கிடைத்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரயில் பயண விவரம் (வண்டி எண்: 17615/17616): திங்கள்கிழமை இரவு காச்சிகுடாவில் இருந்து புறப்பட்டு, புதன்கிழமை காலை தூத்துக்குடியைச் சென்றடையும். மீண்டும் புதன்கிழமை காலை தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, வியாழக்கிழமை மதியம் காச்சிகுடாவைச் சென்றடையும்.
முக்கிய நிறுத்தங்கள்: கர்னூல் சிட்டி, அனந்தபூர், திருப்பதி (பகாலா), காட்பாடி, வேலூர் கேன்ட், திருவண்ணாமலை, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் மற்றும் மதுரை வழியாக இந்த ரயில் இயக்கப்படும்.
தூத்துக்குடியில் இருந்து ஹைதராபாத் செல்வதற்கு முதன்முறையாக நேரடி ரயில் சேவை கிடைத்துள்ளது. இதன் மூலம் மதுரை, தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் திருப்பதி போன்ற ஆன்மிகத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்களுக்குப் பெரும் வசதி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஹைதராபாத்திலிருந்து திருச்செந்தூர் வரும் பக்தர்கள் இந்த ரயிலைப் பயன்படுத்தி தூத்துக்குடி வரை வர முடியும்.
தற்போது காச்சிகுடா - மதுரை சிறப்பு ரயில் சேவை மார்ச் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்தச் சேவை முடிந்த பிறகு, வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த ரயில் தூத்துக்குடி வரை நிரந்தர ரயிலாக இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிரந்தர ரயிலாக மாற்றப்படுவதால், இனி பயணிகள் 60 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்து கொள்ளும் வசதி கிடைக்கும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வி.ஜி.எஸ் பள்ளியின் 10-வது தாளாளராக சுதன் ஹீலர் பொறுப்பேற்பு!
சனி 28, பிப்ரவரி 2026 9:31:12 PM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் மீனவர் உயிரிழப்பு
சனி 28, பிப்ரவரி 2026 5:45:58 PM (IST)

துறைமுகங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி: சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது!
சனி 28, பிப்ரவரி 2026 4:41:41 PM (IST)

தூத்துக்குடி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் : உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
சனி 28, பிப்ரவரி 2026 3:49:27 PM (IST)

தூத்துக்குடி பள்ளிக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் விசிட் : பழைய நினைவுகளில் மூழ்கினார்!
சனி 28, பிப்ரவரி 2026 3:39:25 PM (IST)

தூத்துக்குடி அருகே 30 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!
சனி 28, பிப்ரவரி 2026 11:30:11 AM (IST)










