» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: திமுகவினருக்கு அமைச்சர் கீதா ஜீவன் வேண்டுகோள்!

சனி 28, பிப்ரவரி 2026 8:49:01 AM (IST)

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முதல்வரின் பிறந்த நாளை, ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று மாவட்ட செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான பி.கீதா ஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினின் 73-ஆவது பிறந்த நாள் விழா மார்ச் 1-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற உயரிய தத்துவத்தின் அடிப்படையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி, மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வரும் முதல்வரின் பிறந்த நாளை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான பி.கீதா ஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதையொட்டி, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளைக் கழக அமைப்புகள் சார்பில் கட்சியின் கொள்கைப் பாடல்களை ஒலிபரப்பியும், ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கியும் எழுச்சியுடன் கொண்டாட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory