» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 27, பிப்ரவரி 2026 8:49:53 PM (IST)
முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 2018-ம் ஆண்டு மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த பாலமுருகன் (45/26) என்பவர் தனது மனைவி சாந்தியை கொலை செய்த வழக்கில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் இன்று (27.02.2026) பாலமுருகனை குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் மற்றும் இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், தற்போதைய காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் ஆகியோரையும், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் கணேசன் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் 1868 ஆக உயர்வு: இறுதி பட்டியலில் 13.88 லட்சம் வாக்காளர்கள்..!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 4:57:32 PM (IST)

மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் அமல்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:49:01 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் ஒப்படைப்பு : ஆட்சியர் தகவல்
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:44:04 PM (IST)

காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:08:02 PM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: வேட்பாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ., பிரச்சாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST)

இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாகத் தமிழகம் வளர்ந்துள்ளது: அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:34:48 AM (IST)







