» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பள்ளி வகுப்பறையே வங்கியாக மாறியது : மாணவர்கள் உற்சாகம்!

வெள்ளி 27, பிப்ரவரி 2026 3:22:25 PM (IST)



மாணவர்களிடையே வங்கிச் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி செயின்ட் சேவியர்ஸ் பள்ளியில் சிறப்பான வங்கிப் பணி பயிற்சி முகாம் நடைபெற்றது.

இப்பயிற்சியில் வங்கியில் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல் மற்றும் அதற்கான படிவங்களை பிழையின்றி நிரப்புவது குறித்து மாணவர்களுக்கு நேரடிப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், புதிய வங்கி கணக்கு தொடங்குவதற்கான நடைமுறைகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.

இந்த பயிற்சிக்காக ஒரு வகுப்பறை அப்படியே மாதிரி வங்கி போல மாற்றப்பட்டிருந்தது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்     மேலாளர், காசாளர் என அனைத்துப் பொறுப்புகளையும் மாணவர்களே ஏற்று நடத்தினர். வங்கியின் அன்றாட அலுவல் பணிகளை மாணவர்கள் கையாண்ட விதம் அனைவரையும் கவர்ந்தது.

நிஜ வங்கிச் சூழலை நேரில் கண்டது போன்ற உணர்வை ஏற்படுத்திய இந்த முன்னெடுப்பை ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினரும் வெகுவாகப் பாராட்டினர். இந்த சிறப்பான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் வழிகாட்டுதலில், ஆசிரியர் லூர்துசாமி செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory