» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சந்திர கிரகணம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் பூஜை நேரங்கள் மாற்றம்!

வெள்ளி 27, பிப்ரவரி 2026 9:04:30 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு வருகிற 3ஆம் தேதி நடை திறப்பு மற்றும் பூஜை நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலில் வரும் 03.03.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, கோயிலின் நடை திறப்பு மற்றும் பூஜை நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அன்று மதியம் 03:20 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகி, மாலை 05:00 மணிக்கு மத்திய காலத்தையும், மாலை 06:48 மணிக்கு நிறைவையும் அடைகிறது. இதன் காரணமாக, மதிய பூஜைகள் முடிந்தவுடன் பகல் 12:00 மணிக்கு கோயிலின் நடை சாத்தப்படும்.

பின்னர் கிரகண காலம் முடிந்து, இரவு 07:30 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்படும். அதனைத் தொடர்ந்து சாயரட்சை மற்றும் அர்த்த சாம பூஜைகள் முறைப்படி நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழு அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory