» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோயில் பெருந்திட்ட வளாகப் பணி : புதிய கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 8:51:10 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பெருந்திட்ட வளாகப் பணிகளில், கோயில் நிதி ரூ. 68.47 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை பக்தர்களின் பயன்பாட்டுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
தமிழ்க் கடவுள் முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பெருந்திட்ட வளாகப் பணிகளின் ஒரு பகுதியாக கோயில் நிதி ரூ. 68.47 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை பக்தர்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். முன்னதாக, அறநிலையத் துறை சார்பில் ரூ. 100 கோடி மற்றும் ஹெச்.சி.எல் (HCL) நிறுவனம் சார்பில் ரூ. 200 கோடி என மொத்தம் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் இப்பெருந்திட்டப் பணிகளுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு முதல்வர் அடிக்கல் நாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நிறைவடைந்துள்ள இப்பணிகளில், தலா இரண்டு எண்ணிக்கையிலான தங்கும் குடில்கள், சஷ்டி மண்டபங்கள் மற்றும் தங்கும் வளாகங்கள் ஆகியவை பக்தர்களின் வசதிக்காகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், மூன்று சுகாதார வளாகங்கள், மூன்று பூஜை பொருட்கள் விற்பனை நிலையங்கள், பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி தயாரிக்கும் கூடங்கள், நுழைவாயில் மற்றும் ரூ. 1 கோடி மதிப்பிலான சம்ப் மற்றும் பம்ப் அறைகள் ஆகியவையும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இவற்றுடன் ரூ. 97 லட்சம் மதிப்பிலான பசுமடம் மற்றும் கடற்கரைப் பகுதியில் கடல் அரிப்பைத் தடுப்பதற்கான பாதுகாப்புச் சுவர் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, கோயில் கடற்கரைப் பரப்பில் ஏற்படும் கடல் அரிப்பைத் தடுக்கும் பொருட்டு, மூழ்கிய நிலையில் அமைக்கப்படவுள்ள கடல்சார் அலைத்தடுப்புச் சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைக்கும் புதிய பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் கோயில் கலையரங்கில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கோயில் தக்கார் ரா. அருள்முருகன் குத்துவிளக்கேற்றி, கல்வெட்டைத் திறந்து வைத்து புதிய கட்டிடங்களைப் பார்வையிட்டார். இந்நிகழ்வில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் கௌதம், காவல் துணைக் கண்காணிப்பாளர் மகேஷ்குமார், கோயில் இணை ஆணையர் க. ராமு, மண்டல இணை ஆணையர் அன்புமணி, நகர்மன்றத் தலைவர் சிவஆனந்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் 1868 ஆக உயர்வு: இறுதி பட்டியலில் 13.88 லட்சம் வாக்காளர்கள்..!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 4:57:32 PM (IST)

மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் அமல்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:49:01 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் ஒப்படைப்பு : ஆட்சியர் தகவல்
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:44:04 PM (IST)

காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:08:02 PM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: வேட்பாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ., பிரச்சாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST)

இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாகத் தமிழகம் வளர்ந்துள்ளது: அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:34:48 AM (IST)







