» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் பொறியியல் கல்லூரி புதிய தாளாளராக மாமல்லன் பதவியேற்பு!

வியாழன் 26, பிப்ரவரி 2026 11:04:34 AM (IST)



நாசரேத் பொறியியல் கல்லூரி தாளாளராக மாமல்லன் பதவி பொறுப்பேற்றார்.

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ.பொறியியல் கல்லூரியில் புதிய தாளாளர் பதவியேற்பு விழா நடந்தது. குருவானவர் செல்வின் சார்லஸ் ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரி புதிய தாளாளராக திருமண்டல செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நாசரேத் பேரூராட்சி தலைவருமான மாமல்லன் பதவியேற்றார். புதிய தாளாளரை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஆக்னஸ் பிரேமாமேரி மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள் ஸ்டீபன் சாலமோன், சுபாஷ், கரோலின், பிரவின்குமார், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள்விக்டர் மோகன்சிங், தில கர், லிவிங்ஸ்டன், ராஜேஷ், வினோதினி, நாசரேத் சேகர செயலாளர் ராஜசிங் சாலமோன், பொருளாளர் லேவி அசோக் சுந்தர்ராஜ், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், நாசரேத் சேகர கமிட்டி உறுப்பினர்கள் புஷ்பராஜ், பர்னபாஸ் ஜெயக்குமார், நிர்மல்சிங், டேவின் சாலமோன், மாணிக்கராஜ் வில்சன், ராஜேஷ், ஞானசெல்வன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்று புதிய தாளாளருக்கு பொன்னாடை  அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். நிறைவாக குருவானவர் ஜாண்சன் நிறைவு ஜெபம் செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory