» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி 1-வது ரயில்வே கேட் திடீர் மூடல் - பொதுமக்கள் கடும் அவதி
வியாழன் 26, பிப்ரவரி 2026 8:53:55 PM (IST)

தூத்துக்குடி மாநகரின் மிக முக்கியப் பகுதியான 1-வது ரயில்வே கேட், இன்று எவ்வித முன் அறிவிப்புமின்றி திடீரென மூடப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ரயில்வே கேட்டில் உள்ள தானியங்கி கதவு திடீரென இயங்காமல் போனதே இந்த பாதிப்பிற்குப் பிரதான காரணமாகக் கூறப்படுகிறது. இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, கதவுகளைத் திறக்கவோ மூடவோ முடியாத நிலை ஏற்பட்டது. தகவலறிந்த ரயில்வே தொழில்நுட்பப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பழுதான தானியங்கி கதவைச் சரிசெய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய சாலை என்பதால், கேட் மூடப்பட்டதைத் தொடர்ந்து சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. மாற்றுப் பாதை குறித்த தெளிவான அறிவிப்பு இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள், அவசர சிகிச்சைக்காகச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் எனப் பலதரப்பட்ட மக்களும் கடும் அவதிக்குள்ளாகினர். இந்தப் பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்தைச் சீர்செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!
வியாழன் 26, பிப்ரவரி 2026 9:16:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தை பார்வையிட்ட லசால் பள்ளி மாணவர்கள்!
வியாழன் 26, பிப்ரவரி 2026 8:40:27 PM (IST)

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்!
வியாழன் 26, பிப்ரவரி 2026 5:44:05 PM (IST)

பள்ளி மாணவியைப் பிரம்பால் தாக்கிய ஆசிரியை கைது : தூத்துக்குடியில் பரபரப்பு
வியாழன் 26, பிப்ரவரி 2026 4:15:39 PM (IST)

டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள்: தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
வியாழன் 26, பிப்ரவரி 2026 4:03:35 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் : ரூ.298.77 லட்சம் உபரி நிதி - அதிமுக வெளிநடப்பு
வியாழன் 26, பிப்ரவரி 2026 3:34:10 PM (IST)










