» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஒரே வீட்டுக்குள்ளே முதல்வர், துணைமுதல்வர் அவசியமா? : கடம்பூர் ராஜு கேள்வி!
வியாழன் 26, பிப்ரவரி 2026 10:43:57 AM (IST)

ஸ்டாலின் உயிரோடு இருக்கும் போதே அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வேண்டிய அவசியம் என்ன? என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் அதிமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜீ பேசுகையில், பாராளுமன்ற தேர்தலில் நம் கூட ஒருவர் இருந்தார். அவர் தற்போது திசை மாறிப் போய்விட்டார். திசை மாறி போனவர்கள் இன்று திக்குத் தெரியாமல் இந்தத் தேர்தல் முடிந்த பிறகு போய் விடுவார்கள். சாதாரண உழைக்கின்ற தொண்டர்களை உயர்த்தி காட்டிப் பார்ப்பது அது அண்ணா திமுக மட்டும் தான்.
திமுகவில் அண்ணாவில் இருந்து கருணாநிதி வரை உழைத்தவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தாண்ட முடியவில்லை. கருணாநிதிக்கு பிறகு கருணாநிதி மகன் ஸ்டாலின், ஸ்டாலின் உயிரோடு இருக்கும் போதே அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் துணை முதல்வராக வேண்டிய நாட்டின் அவசியம் என்ன?. ஒரே வீட்டுக்குள்ளே முதலமைச்சரும் துணை முதலமைச்சர் இருக்க வேண்டிய அவசியம் இந்தியா மட்டுமல்ல உலகிலேயே எங்கும் நடக்காத அசிங்கம் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது.
இதையும் பார்த்துக் கொண்டு திமுக காரர்கள் உப்பு போட்டு தான் சாப்பிடுகிறார்களா? என்று தெரியவில்லை. ஏனென்றால் கொஞ்சமாவது உணர்வு சூடு சொரணை வேண்டாமா, திமுக என்ன கருணாநிதியின் குடும்ப சொத்தா? இது மன்னர் ஆட்சியா? திமுக ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலின் குடும்பத்திற்கு மட்டுமே நல்லது. அண்ணா திமுக ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்களுக்கு நல்லது. தன்னுடைய வீட்டு மக்களுக்கு மட்டும் நல்லது என்றால் அது திமுக ஆட்சி. இந்தத் தேர்தலில் நீங்கள் இரட்டை இலையை பார்த்து அமுக்குங்க, தேர்தல் முடிந்த பிறகு பட்டு பட்டுன்னு உங்க வீட்டில பத்தாயிரம் ரூபாய் வந்து விழும். என்று கடம்பூர் ராஜீ பேசினார்.
இந்த விழாவுக்கான ஏற்பாட்டினை அதிமுக ஒன்றிய செயலாளர்கள் தனஞ்செயன், தனவதி, நகர செயலாளர் ஆண்டி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் மோகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சத்யா, ஒன்றிய செயலாளர்கள் மகேஷ்,ராமச்சந்திரன், போடுசாமி,பால்ராஜ், சிறுபான்மை நலப் பிரிவு சதீஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆனந்த், மருதுபாண்டி, சுரேஷ், முன்னாள் கவுன்சிலர் பெருமாள் சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் 1868 ஆக உயர்வு: இறுதி பட்டியலில் 13.88 லட்சம் வாக்காளர்கள்..!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 4:57:32 PM (IST)

மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் அமல்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:49:01 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் ஒப்படைப்பு : ஆட்சியர் தகவல்
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:44:04 PM (IST)

காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:08:02 PM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: வேட்பாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ., பிரச்சாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST)

இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாகத் தமிழகம் வளர்ந்துள்ளது: அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:34:48 AM (IST)







