» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளியில் மாணவர்களிடையே மோதல் : 5 மாணவர்கள் மீதான வழக்கு வாபஸ்!

வியாழன் 26, பிப்ரவரி 2026 10:11:46 AM (IST)



பள்ளியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஐந்து மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருதரப்பினரயும் அழைத்து வட்டாட்சியர் சமாதான பேச்சுவார்த்தையில் வழக்கை வாபஸ் வாங்க முடிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் அரசு உதவி பெறும் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கிடையே திடீரென கடந்த வாரம் மோதல்  ஏற்பட்டுள்ளது. இதில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவன் ஒருவர் காயம் அடைந்தார். பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பத்தினர் புகார் அளித்தும்  நடவடிக்கை எடுக்காததை கண்டித்து  விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து விடுதலை சிறுத்தை கட்சி நிறுவனத் தலைவர் திருமாவளவனிடம் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் புகார் தெரிவித்ததை அடுத்து, தட்டார் மடம் போலீசார், பள்ளியில் மாணவனை தாக்கிய மற்றொரு பிரிவை சேர்ந்த 5 மாணவர்கள் மீது பி.சி.ஆர் வழக்கு பதிவு செய்தனர். பள்ளி  மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட எஸ்பி மற்றும் தடார்மடம் போலீசார், சாத்தான்குளம்  வட்டாட்சியர்  ராஜேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகளிடம்  முறையிட்டனர். பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட பி.சி.ஆர் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

அதன் பேரில்  இருதரப்பை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து சாத்தான்குளம் வட்டாட்சியர்  அலுவலகத்தில் புதன்கிழமை சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. சாத்தான்குளம்  வட்டாட்சியர்   ராஜேஸ்வரி தலைமை வகித்தார். இதில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் வேலம்மாள், தலைமையிடத்து துணை வட்டாட்சியர்  கணேஷ்குமார், சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்பில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

இதில் விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி மாவட்ட செயலர் சுரேந்தர், மண்டல செயலர் ராஜ்குமார், மண்டல துணைச் செயலர் திருவள்ளுவன், சாத்தான்குளம் ஒன்றிய செயலர்கள் ஜெயராமன், செந்தில் மற்றும் சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க தலைவர் லூர்து மணி, உள்ளிட்ட இருதரப்பை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாணவர்கள் மீது பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் எந்தவித வழக்கு பதிவு செய்ய கூறவில்லை எனவும், பள்ளியில் நடந்த இந்த மாணவர்களின் பெற்றோருக்கு தெரியப்படுத்தாமல் நடவடிக்கை எடுக்காமல் இருந்த பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேர்களை வேறு பள்ளிக்கு பணி மாற்றம் செய்ய வேண்டும் எனவும் காவல்துறை மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்கினை சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி மாணவர்களின் நலம் கருதி இரு வழக்குகளையும் சமாதானமாக முடிப்பதற்கு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் உண்மைத் தன்மை அறியாமல்  சமூக வலைத்தளங்களில் செய்தியினை பரப்பக் கூடாது. எனவும், அதனை மீறும்பட்சத்தில் காவல்துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் இருக்க பள்ளி நிர்வாகம் சார்பில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பெற்றோர்கள் ஆசிரியர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடத்தப்பட வேண்டும். என என முடிவு செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory