» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயிலில் பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

புதன் 25, பிப்ரவரி 2026 8:22:12 PM (IST)

ரயிலில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண்ணின் தாலிச் செயினை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 11.04.2025 அன்று, திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆனந்தபுரி எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில், கங்கா தேவி என்ற பெண் திருநெல்வேலியிலிருந்து மதுரைக்குச் செல்வதற்காக நெல்லை ரயில் நிலையத்தில் ஏறியுள்ளார். ரயில் நிலையத்தில் நிலவிய கடும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, மர்ம நபர் ஒருவர் கங்கா தேவியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தாலிச் செயினை நைசாகப் பறித்துச் சென்றுள்ளார்.

ரயில் கோவில்பட்டி நிலையத்தை அடைந்தபோது, தனது கழுத்தில் இருந்த நகை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கங்கா தேவி கூச்சலிட்டுள்ளார். இது குறித்து அவர் உடனடியாக தூத்துக்குடி இருப்புப் பாதை (ரயில்வே) காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், தூத்துக்குடி முள்ளக்காடு ராஜீவ் நகர் முதல் தெருவைச் சேர்ந்த ஐயப்பன் மகன் மதுரை வீரன் (20) என்பவர் நகையைப் பறித்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 6 பவுன் தங்க நகையை மீட்டனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி ஜே.எம். 4 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ். பாக்கியராஜ், குற்றம் சாட்டப்பட்ட மதுரை வீரன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை ரூபாய் 3,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory