» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
லாரிகள் மோதி விபத்து: ஓட்டுநர் உயிரிழப்பு
புதன் 25, பிப்ரவரி 2026 4:38:14 PM (IST)
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில், ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர், சுண்டப்பபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் முனியாண்டி (58). இவர், லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இன்று முனியாண்டி தனது வாகனத்தில் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். எட்டயபுரம் அருகே சென்றபோது, அவருக்கு முன்னால் சென்ற லாரி எதிர்பாராதவிதமாகத் திடீரென நிறுத்தப்பட்டது.
முனியாண்டி பிரேக் போட்டு வாகனத்தைக் கட்டுப்படுத்த முயற்சித்தும், வேன் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்புறம் பலமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த முனியாண்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், முனியாண்டி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். விபத்து தொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, லாரி டிரைவரான குஜராத் மாநிலம் காந்திதாம் பகுதியைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் மகன் ரஞ்சித் ஜோத் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.26.50 லட்சம் மோசடி: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!
புதன் 25, பிப்ரவரி 2026 9:23:53 PM (IST)

ரயிலில் பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 25, பிப்ரவரி 2026 8:22:12 PM (IST)

பாதாள சாக்கடைப் பணியில் விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர் பலி : தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 25, பிப்ரவரி 2026 8:11:16 PM (IST)

சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு 21 நாடார் அமைப்புகள் ஆதரவு: இபிஎஸ் உடன் நிர்வாகிகள் சந்திப்பு
புதன் 25, பிப்ரவரி 2026 8:01:33 PM (IST)

தூத்துக்குடி பள்ளி அருகே சாக்கடைக் கழிவுகள்: அகற்றக்கோரி விசிக சாலை மறியல் போராட்டம்
புதன் 25, பிப்ரவரி 2026 7:53:50 PM (IST)

தூத்துக்குடியில் பிப்.27ஆம் தேதி கல்விக்கடன் முகாம் : ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
புதன் 25, பிப்ரவரி 2026 3:33:08 PM (IST)










