» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பள்ளி அருகே சாக்கடைக் கழிவுகள்: அகற்றக்கோரி விசிக சாலை மறியல் போராட்டம்

புதன் 25, பிப்ரவரி 2026 7:53:50 PM (IST)



தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி அருகே சாக்கடைக் கழிவுகள் கொட்டப்படுவதைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் சிவந்தாகுளம் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அள்ளப்படும் சாக்கடைக் கழிவுகளை இப்பள்ளியின் அருகே மற்றும் சாலையின் நடுவே கொட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து விசிக மண்டல துணைச் செயலாளர் அர்ஜுன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மாநகராட்சி நிர்வாகம் தூய்மைப் பணி என்ற பெயரில், நகரின் ஒட்டுமொத்த சாக்கடைக் கழிவுகளையும் பள்ளி வளாகத்தின் அருகிலேயே கொட்டி வருகிறது. இதனால் ஏற்படும் கடும் துர்நாற்றத்தால் மாணவர்கள் நிம்மதியாக உணவு உட்கொள்ளவோ, வகுப்பறையில் அமர்ந்து படிக்கவோ முடியாமல் அவதிப்படுகின்றனர்."

இது தொடர்பாகப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தென்பாகம் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ளார். இருப்பினும், தொடர்ந்து டிராக்டர்கள் மூலம் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆட்டோ கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தின் போது, "பள்ளி அருகே கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்; தவறினால் 500-க்கும் மேற்பட்டோரைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் எச்சரிக்கை விடுத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory