» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மது பழக்கத்தை தாய் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை: சூரங்குடி அருகே சோகம்

புதன் 25, பிப்ரவரி 2026 11:24:52 AM (IST)

சூரங்குடி அருகே மது அருந்துவதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் மேல்மாந்தை நடுத்தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் தனஜெயம் (24). இவர் வேலை முடிந்து விட்டு தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் பழக்கம் கொண்டவர் எனக் கூறப்படுகிறது.

வழக்கம்போல நேற்று மது போதையில் வீட்டிற்கு வந்த தனஜெயத்தை, அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தனஜெயம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த சூரங்குடி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜ், வழக்குப் பதிவு செய்து தனஜெயத்தின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


மக்கள் கருத்து

தமிழன்Feb 25, 2026 - 03:46:36 PM | Posted IP 104.2*****

காரணம் மது போதை . வாழ்க டாஸ்மாக், வாழ்க திராவிடம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory