» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆழ்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

புதன் 25, பிப்ரவரி 2026 8:30:02 AM (IST)

கன்னியாகுமரி அருகே ஆழ்கடலில் எஞ்சின் பழுதாகி 20 நாட்களாகத் தத்தளித்து வந்த மணப்பாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் நேற்று அதிகாலையில் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான விசைப்படகில், மணப்பாடு மீனவர் காலனியைச் சேர்ந்த திலக், சிலுவை, பிரைட்வின், ரபிஸ்டன், லபிஸ்டன் மற்றும் சிலுவைபிச்சை ஆகிய 6 மீனவர்கள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொச்சியிலிருந்து மீன்பிடிக்கச் சென்றனர்.

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகப் படகின் எஞ்சின் பழுதானது. அதனைச் சரிசெய்ய முடியாமலும், செல்போன் சிக்னல் கிடைக்காததாலும் குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முடியாமல் மீனவர்கள் தவித்தனர். இதற்கிடையில், கடந்த 18-ஆம் தேதி ரபிஸ்டன் என்பவர் தனது மனைவி டிலெட்டாவுக்குச் சிரமப்பட்டுத் தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மீனவர்களை மீட்கக் கோரி குடும்பத்தினர் ஆட்சியர் மற்றும் கடலோரக் காவல் படையினரிடம் மனு அளித்தனர். 

அவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி மணப்பாட்டில் 350-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர். கடலோரக் காவல் படையினருடன் இணைந்து மணப்பாடு மீனவர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை கன்னியாகுமரியிலிருந்து 150 நாட்டிக்கல் மைல் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்த 6 மீனவர்களையும், பழுதான படகையும் மீனவர்கள் கண்டுபிடித்துப் பத்திரமாக மணப்பாட்டிற்கு அழைத்து வந்தனர். இதனால் மணப்பாடு கிராமமே மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory