» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது!

புதன் 25, பிப்ரவரி 2026 8:23:41 AM (IST)

சாகுபுரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இரண்டு இளைஞர்களைப் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று சாகுபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு தேவாலயம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இரண்டு இளைஞர்கள், போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர். 

போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்துச் சோதனை செய்தபோது, அவர்களது உடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்கள் சிக்கின. சுமார் 125 கிராம் எடையுள்ள கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள், உச்சிநிமாகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சின்னத்துரை மகன் விக்னேஷ் (23) மற்றும் காயல்பட்டினம் ரத்தினாபுரி பகுதியைச் சேர்ந்த ரத்தினம் மகன் ராஜீவ் பிரபு (23) என்பது தெரியவந்தது. இவர்கள் அந்தப் பகுதியில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களுக்குக் கஞ்சா விற்று வந்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இது குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory