» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் திருமண்டல புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா: பேராயர் ஐசக் வரபிரசாத் பங்கேற்பு
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 4:15:57 PM (IST)

நாசரேத்தில் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் பிரதம பேராயரின் ஆணையாளர் பேராயர் ஐசக் வரபிரசாத் பங்குபெற்றார்.
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் இறுதி கட்ட தேர்தல் நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் வைத்து கடந்த 16ம் தேதி நடைபெற்றது. இத் தேர்தலை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி தலைமையேற்று நடத்தினார்.
இத்தேர்தலில் எஸ்.டி.கே. ராஜன் அணி சார்பில் போட்டியிட்ட குருவானவர் மோசஸ் ஜெபராஜ் உபதலைவராகவும், குருவானவர் டி.ஜி.ஏ. தாமஸ் குருத்துவச் செயலராகவும், எஸ்.டி.கே. அணித் தலைவர் எஸ்.டி.கே. ராஜன் லே செயலராகவும், டி.கே.எம்.ஜான்சன் பொருளாளராகவும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து திருமண்டல செயற்குழு பிரதிநிதிகள் மற்றும் சினாடு பேரவை தேர்தல்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இதிலும் எஸ்.டி.கே. ராஜன் அணியினர் பெரும்பான்மையாக வெற்றி பெற்றனர்.
இதைத் தொடர்ந்து நேற்று 23 ம் தேதி நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி சிற்றாலயத்தில் வைத்து தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு ஆரம்பமாக திருமண்டல உப தலைவர் குருவானவர் மோசஸ் ஜெபராஜ் ஜெபம் செய்தார். தொடர்ந்து புதிய நிர்வாகிகளுக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது.
இதில் சி.எஸ்.ஐ. சினாடு பேரவை வழிகாட்டுதலின் படி, பிரதமப் பேராயரின் ஆணையாளரும் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் பொறுப்பு பேராயருமான ஐசக் வரபிரசாத் முன்னிலையில் திருமண்டல புதிய நிர்வாகிகளான உபதலைவர் குருவானவர் மோசஸ் ஜெபராஜ், திருமண்டல குருத்துவ செயலர் குருவானவர் டி.ஜி.ஏ. தாமஸ், லே செயலர் எஸ்.டி.கே. ராஜன், பொருளாளர் டி.கே.எம். ஜான்சன் டேவிட் ஆகியோர் பதவிப் பொறுப்பேற்றனர்.
இவ் விழாவில் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள் ஜெபச்சந்திரன், சி. த செல்லப்பாண்டியன், மாமல்லன் , அருள் , குணசீலன் தங்கதுரை , ஸ்டீபன், எட்வர்ட், அருள் மேயர், மால் சொர்ணபாண்டியன், அருண், ஜானியல், சுபாஷ், ராபின், ஜான்சிங் உட்பட திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள் 45 பேர் கலந்து கொண்டனர். நிறைவாக பிரதம பேராயரின் ஆணையாளர் பேராயர் ஐசக் வரபிரசாத் இறைஆசி வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.26.50 லட்சம் மோசடி: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!
புதன் 25, பிப்ரவரி 2026 9:23:53 PM (IST)

ரயிலில் பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 25, பிப்ரவரி 2026 8:22:12 PM (IST)

பாதாள சாக்கடைப் பணியில் விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர் பலி : தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 25, பிப்ரவரி 2026 8:11:16 PM (IST)

சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு 21 நாடார் அமைப்புகள் ஆதரவு: இபிஎஸ் உடன் நிர்வாகிகள் சந்திப்பு
புதன் 25, பிப்ரவரி 2026 8:01:33 PM (IST)

தூத்துக்குடி பள்ளி அருகே சாக்கடைக் கழிவுகள்: அகற்றக்கோரி விசிக சாலை மறியல் போராட்டம்
புதன் 25, பிப்ரவரி 2026 7:53:50 PM (IST)

லாரிகள் மோதி விபத்து: ஓட்டுநர் உயிரிழப்பு
புதன் 25, பிப்ரவரி 2026 4:38:14 PM (IST)










