» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது: மது போதையில் நேர்ந்த கொடூரம்!

செவ்வாய் 24, பிப்ரவரி 2026 8:36:16 AM (IST)

எட்டயபுரம் அருகே காதணி விழாவில் ஏற்பட்ட தகராறில், வாலிபரை வெட்டிக்கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்த பெரியநாயகம் (33) என்பவர், எட்டயபுரம் அருகே மினி வேனில் மதுபோதையில் படுத்திருந்தபோது 3 பேரால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாகக் கவர்னகிரியைச் சேர்ந்த முனியசாமி (36), பொன் மாடசாமி (26) மற்றும் மாரிச்செல்வம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இருக்கன்குடி கோவிலில் நடந்த காதணி விழாவின் போது, பெரியநாயகம் கூடுதலாக மது அருந்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் உணவருந்தச் சென்றபோது ஏற்பட்ட மோதலால் ஆத்திரமடைந்த மூவரும், பெரியநாயகம் வேனில் உறங்கிக் கொண்டிருந்தபோது அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பெரியநாயகத்தின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்குப் பின் வாங்க மறுத்து அவரது உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நிவாரணம் வழங்கக் கோரி முழக்கமிட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து உடலைப் பெற்றுச் சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory