» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செய்துங்கநல்லூரில் திருக்குறள் பயிலரங்கம்: மாணவர்களுக்குச் சான்றிதழ் - மரக்கன்றுகள் வழங்கல்

சனி 21, பிப்ரவரி 2026 7:48:06 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ‘திருக்குறள் திருப்பணிகள்’ திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தொடர் பயிற்சி வகுப்பு மற்றும் பயிலரங்கம் மாவட்டத்தின் மூன்று இடங்களில் நடைபெற்று வருகிறது.

மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் இளங்கோ செயலாளராகச் செயல்படும் இந்தத் திட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, முத்தாலங்குறிச்சி காமராசு, இரா.ராசு, சரவணகுமார், பே. சங்கரலிங்கம், அன்பழகன் ஆகியோர் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, செய்துங்கநல்லூர் ஜோஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான திருக்குறள் வகுப்பு நடைபெற்றது. பயிலரங்கின் நிறைவாக, பங்கேற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்குத் திருக்குறள் கண்காணிப்புக் குழு உறுப்பினரும், பயிலரங்கக் குழுத் தலைவருமான முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜெய்த்தூன் பீவி முன்னிலை வகித்தார். கோபாலகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார்.

தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் இளங்கோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, திருக்குறள் திட்டப்பணிகளின் நினைவாகப் பள்ளி வளாகத்தில் மேல ஆழ்வார் தோப்பு 'கிராம உதயம்' சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் கண்காணிப்புக் குழு உறுப்பினர் சரவணகுமார், அண்டார்டிகா ஆய்வாளர் இளங்கோ, கந்தசுப்பு, மணிமொழிச்செல்வன், ஜெயசித்ரா, எழுத்தாளர்கள் மாரிமுத்து, காளிமுத்து மற்றும் ஆசிரியர்கள் அருள்செல்வி, அங்கயற்கனி, சியாமளா, டெமி அருள்டா, மகாலெட்சுமி, பானுமதி, ஜெபஸ்லின், தனலெட்சுமி, தமிழ் வளர்ச்சித்துறை அழகுமாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிறைவாக, கிராம உதயம் கிளை மேலாளர் வேல்முருகன் நன்றிகூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளைத் தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை திருக்குறள் திருப்பணிகள் திட்ட ஒருங்கிணைப்புக் குழு செய்திருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory