» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி - கச்சகுடா புதிய ரயில் சேவை தொடங்கியது : பயணிகள் உற்சாக வரவேற்பு
புதன் 8, ஏப்ரல் 2026 11:43:22 AM (IST)

தூத்துக்குடி மற்றும் தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத் (கச்சகுடா) இடையேயான புதிய வாராந்திர விரைவு ரயில் சேவை இன்று தொடங்கியது.
தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள கச்சிகுடாவிலிருந்து தூத்துக்குடிக்கு புதிய வாராந்திர ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இந்த ரயில் சேவையின் முதற்கட்டப் பயணம் இன்று காலை தூத்துக்குடியிலிருந்து தொடங்கியது.
கச்சிகுடா - தூத்துக்குடி: ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 7:00 மணிக்குக் கச்சிகுடாவிலிருந்து புறப்பட்டு, மறுநாள் (செவ்வாய்க்கிழமை) இரவு 10:30 மணிக்குத் தூத்துக்குடியைச் சென்றடையும்.
தூத்துக்குடி - கச்சிகுடா: மறுமார்க்கத்தில், ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 7:40 மணிக்குத் தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் (வியாழக்கிழமை) மதியம் 1:25 மணிக்குக் கச்சிகுடாவைச் சென்றடையும்.
முக்கிய நிறுத்தங்கள்: இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, சித்தூர், தர்மாவரம், அனந்தபூர், கர்னூல் மற்றும் மெகபூப் நகர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த புதிய ரயில் சேவை மூலம் தென் மாவட்ட மக்கள் ஐதராபாத் செல்வதற்கு இனி கூடுதல் வசதி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் ஆன்மீக மற்றும் வர்த்தக நகரங்களை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுடன் இணைக்கும் வகையில் இந்த ரயிலின் தடம் அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் வரவேற்பு: தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை கச்சிகுடாவுக்கான முதல் ரயில் புறப்பட்டது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் ரயிலுக்கு வாழை தோரணங்கள் கட்டி, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட பயணிகள் நல சங்கத் தலைவர் அ. கல்யாணசுந்தரம், செயலாளர் மா. பிரமநாயகம், பொருளாளர் வே.லெட்சுமணன் துணைத் தலைவர் எஸ் அந்தோணி முத்துராஜா, நிர்வாகச் செயலாளர் ஜே.ஏ.என். ஆனந்தன், உறுப்பினர் முத்துக்கிருஷ்ணன், நாராயணன் மற்றும் தூத்துக்குடி ரயில் நிலைய மேலாளர் ராஜு, முதன்மை வர்த்தக மேலாளர் உத்திர முருகன், மெக்கானிக்கல் இன்ஜினியர் ராமச்சந்திரன், டிராபிக் இன்ஸ்பெக்டர் சபாபதி, மீளவிட்டான் முதுநிலை லோகோ பைலட் கண்ட்ரோலர் ராஜாராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண், மானம், மொழியைக் காக்க மீண்டும் திமுக ஆட்சி: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 7:54:45 PM (IST)

லாரி மீது கார் மோதல்: தம்பதி உட்பட 4 பேர் பலி : குழந்தைகள் படுகாயம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:43:00 PM (IST)

பனையூரில் 10,000 ஆண்டுகால காலப் பெட்டகம் என திகழும் புதைபடிவங்கள்: தொல்லியல் ஆர்வலர் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:12:54 PM (IST)

தூத்துக்குடியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் – ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:26:58 PM (IST)

நாசரேத் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் மனமகிழ்ச்சி விழா
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:20:23 PM (IST)

அம்பேத்கர் பிறந்தநாள்: ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:23:13 PM (IST)








தூத்துக்குடிக்காரன்Apr 8, 2026 - 06:06:08 PM | Posted IP 104.2*****