» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளர் மார்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு
புதன் 8, ஏப்ரல் 2026 3:10:58 PM (IST)

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜி.வி. மார்கண்டேயன் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டம், சல்லிசெட்டிபட்டி, மாதராஜபுரம், சொக்கமூப்பன்பட்டி, சின்னவநாயக்கன்பட்டி, சேதுபுரம், குமாரசித்தன்பட்டி, சென்னம்பட்டி, எல்.வி.புரம், மாதலபுரம், எம்.துரைசாமிபுரம், குமாரலிங்கபுரம், புதுச் சின்னையாபுரம், ஜெகவீரபுரம், கந்தசாமிபுரம், சேர்வைக்காரன்பட்டி, சங்கரப்பநாயக்கன்பட்டி, பூதலபுரம், சின்னையாபுரம், நூத்தலக்கரை மற்றும் கோவில்குமரெட்டையபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களுக்குச் சென்ற அவர், 'உதயசூரியன்' சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
அவருக்குப் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வாக்கு சேகரிப்பு நிகழ்வில் புதூர் பேரூராட்சித் தலைவர் வனிதா அழகுராஜ், திமுக ஒன்றியச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் செல்வராஜ், வார்டு கவுன்சிலர் வெற்றி வேலன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண், மானம், மொழியைக் காக்க மீண்டும் திமுக ஆட்சி: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 7:54:45 PM (IST)

லாரி மீது கார் மோதல்: தம்பதி உட்பட 4 பேர் பலி : குழந்தைகள் படுகாயம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:43:00 PM (IST)

பனையூரில் 10,000 ஆண்டுகால காலப் பெட்டகம் என திகழும் புதைபடிவங்கள்: தொல்லியல் ஆர்வலர் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:12:54 PM (IST)

தூத்துக்குடியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் – ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:26:58 PM (IST)

நாசரேத் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் மனமகிழ்ச்சி விழா
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:20:23 PM (IST)

அம்பேத்கர் பிறந்தநாள்: ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:23:13 PM (IST)







