» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கல்!

சனி 21, பிப்ரவரி 2026 7:26:18 PM (IST)


விளாத்திகுளம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அண்மையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த நிவாரண நிதி வழங்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வைப்பார் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றுலா வேனும், இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பல்லாகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குருசாமி (40), முத்துலட்சுமி (48), சுமித்திரன் (3), முகில் (5) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த முருகம்மாள் (60) ஆகிய ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த துயர சம்பவத்தை அடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன், அரசு வழங்கிய நிவாரணக் காசோலையை அவர்களிடம் ஒப்படைத்தார்.

இந்த நிகழ்வின் போது விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி, ஊர் தலைவர் லிங்கம், முன்னாள் ஊர் தலைவர் உலகமுத்து, கிளைச் செயலாளர்கள் கனகராஜ், மாரியப்பன், மகளிர் அணியைச் சேர்ந்த ஆனந்தி, அமுதவல்லி மற்றும் இளைஞர் அணி ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory