» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திமுக ஒருமுறை கூடக் களங்கம் இல்லாத அரசைத் தந்ததில்லை: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி!
சனி 21, பிப்ரவரி 2026 5:32:49 PM (IST)

"திமுக ஒருமுறை கூடக் களங்கம் இல்லாத அரசாங்கத்தைத் தந்ததில்லை என்பது தற்போதைய சூழலில் நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற பாஜக மூத்த தலைவர் சரவண பெருமாளின் 9-வது ஆண்டு நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்ட பின், அக்கட்சியின் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : அமைச்சர் கே.என். நேரு மீது நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், அவர் சட்டரீதியாக வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
அல்லது, தமிழக முதல்வர் அவரைத் தற்காலிகமாகப் பொறுப்பிலிருந்து விடுவித்து, விசாரணை நேர்மையாக நடக்க வழிவகை செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், பொது வாழ்க்கையில் 'தூய்மை' மற்றும் 'நேர்மை' பேசுவதில் அர்த்தமே இருக்காது. 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்தது முதல், ஒருமுறை கூடக் களங்கம் இல்லாத அரசாங்கத்தைத் தந்ததில்லை என்பது தற்போதைய சூழலில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
"செக்யூலரிசம்" என்ற பெயரில் தேசிய அடையாளங்களைச் சிதைக்க முயல்கிறார்கள். ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை, வந்தே மாதரம் போன்ற தேசிய பெருமிதங்களை இழிவுபடுத்தும் சூழல் உருவாகி வருகிறது. இவ்வாறு போனால் தேசிய கீதத்தையே பாட முடியாத நிலை ஏற்படும் என்றார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்துப் பேசுகையில், "தேசிய அடையாளங்கள் தமிழகத்திற்குள் நுழையக் கூடாது என்ற மனநிலையில் அவர் உள்ளார். பல ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், பாஜக கூட்டணியில் இருந்தபோதும் வைகோ ஏன் இதுகுறித்துப் பேசவில்லை? அவர் தற்போது இருக்கும் கூட்டணி சரியில்லை; சேரும் இடம் சரியில்லை என்றால் குணமும் மாறும் என்பதற்கு அவர் ஒரு உதாரணம்," என்று சாடினார்.
எஸ்சி/எஸ்டி (SC/ST) நிதியில் இருந்து 5,000 ரூபாய் பணம் முறைகேடாகக் கொடுக்கப்பட்டுள்ளதாக பாஜக மற்றும் அதிமுக சுட்டிக்காட்டியுள்ளன. இதற்குத் தமிழக அரசு இதுவரை பதிலளிக்கவில்லை. இது குறித்து திருமாவளவன் கேள்வி எழுப்ப வேண்டும், போராட வேண்டும். அந்த நிதி எந்த நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்டதோ, அதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும்.
ஓ. பன்னீர்செல்வம் முதிர்ந்த, பண்பட்ட ஒரு தலைவர். தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தவர். அவர் எந்தத் தவறும் செய்ய மாட்டார் என்று நான் நம்புகிறேன். "வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக எத்தனை இடங்களில் போட்டியிடும்?" என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும்" என்று பொன். ராதாகிருஷ்ணன் உறுதியுடன் பதிலளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் விழிப்புணர்வு ஹாக்கி போட்டி: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 8, ஏப்ரல் 2026 3:52:28 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.74.81 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
புதன் 8, ஏப்ரல் 2026 3:18:30 PM (IST)

விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளர் மார்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு
புதன் 8, ஏப்ரல் 2026 3:10:58 PM (IST)

விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற 7பேர் காயம் : தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 8, ஏப்ரல் 2026 12:49:40 PM (IST)

தூத்துக்குடியில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு : தவெக நிர்வாகிகள் - தொண்டர்கள் குவிந்தனர்!
புதன் 8, ஏப்ரல் 2026 12:29:51 PM (IST)

தூத்துக்குடி - கச்சகுடா புதிய ரயில் சேவை தொடங்கியது : பயணிகள் உற்சாக வரவேற்பு
புதன் 8, ஏப்ரல் 2026 11:43:22 AM (IST)







