» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பருவமழை குறைவால் விவசாய நிலங்கள் பாதிப்பு : ஆட்சியர் நேரில் ஆய்வு!

சனி 21, பிப்ரவரி 2026 5:11:43 PM (IST)



விளாத்திகுளம் அருகே மேல்மாந்தை கிராமத்தில் வடகிழக்கு பருவமழை குறைவால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கடந்த 19.02.2026 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விளாத்திகுளம், எட்டையபுரம், கோவில்பட்டி, கயத்தாறு மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அப்போது, இந்தாண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத காரணத்தால், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களில் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் இன்று மேல்மாந்தை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டார். அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களின் வளர்ச்சி நிலை மற்றும் சேத விபரங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். பயிர் சேதங்கள் குறித்து உரிய கணக்கெடுப்பு நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory