» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல திறப்பு: ஊழியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு
புதன் 18, பிப்ரவரி 2026 12:52:47 PM (IST)
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த டாஸ்மாக் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மதுக்கடைகள் அனைத்தும் வழக்கம் போல திறக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு குறித்து டாஸ்மாக் நிறுவன தொழிற்சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (18.02.2026) வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், நேற்று மாலையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதனையடுத்து இன்று (18.02.2026) மற்றும் நாளை (19.02.2026) என இரண்டு நாட்களும் அமைச்சர் முன்பு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதால், வேலை நிறுத்தப் போராட்டம் தாற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பேச்சுவார்த்தையின் முடிவுகள் பொறுத்து வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்.
கடந்த 01.02.2026 முதல் நடைபெற்று வரும் தொடர் காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சங்கத்தின் உறுப்பினர்கள் அணி திரண்டு வந்து போராட்டம் வெற்றி பெற மேலாண்மை இயக்குநர் அலுவலகம் முன்பு ஒன்றிணைந்து காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலாளர் அதிரடி உத்தரவு
தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மதுபானக் கடைப் பணியாளர்கள் அனைவரும் இன்று (18.02.2026) நண்பகல் 12:00 மணிக்குத் தங்களின் பணியிடத்தில் இருக்க வேண்டும் என மாவட்ட மேலாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மாவட்ட மேலாளரின் முன்அனுமதி இன்றி விடுப்பு எடுக்கக் கூடாது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது டாஸ்மாக் விதிகளின்படி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பஞ்ச் டயலாக்' பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள்: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் சாடல்!
சனி 7, மார்ச் 2026 11:01:49 AM (IST)

அணுகு சாலை அமைக்கக் கோரி சாலை மறியல் போராட்டம் : அதிமுக - பாஜக கூட்டணி அறிவிப்பு!
சனி 7, மார்ச் 2026 10:35:25 AM (IST)

தூத்துக்குடியில் துணிகரம்: கத்தி முனையில் 7 பவுன் நகை பறிப்பு - 3 மணி நேரத்தில் குற்றவாளி அதிரடி கைது!
சனி 7, மார்ச் 2026 10:21:03 AM (IST)

இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 7, மார்ச் 2026 8:48:07 AM (IST)

தூத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல்: 3 பேர் கைது!
சனி 7, மார்ச் 2026 8:42:28 AM (IST)

வீடுபுகுந்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!
சனி 7, மார்ச் 2026 8:29:41 AM (IST)








