» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பட்டா வழங்க கோரி 18ம் தேதி மறியல் போராட்டம் : பெருமாள்புரம் பொதுமக்கள் முடிவு!
திங்கள் 16, பிப்ரவரி 2026 12:02:03 PM (IST)

ஆறுமுகநேரி பெருமாள்புரம் பகுதி பொதுமக்கள் 40 ஆண்டுகளாக வசித்து வரும் இடத்திற்கு முறையான பட்டா வழங்க கோரி 18ம் தேதி மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், ஆறுமுகநேரி பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுப் பட்டாக்கள் திரும்பப் பெறப்பட்டதைக் கண்டித்தும், மீண்டும் அவற்றை வழங்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அம்மனுவில் பொதுமக்கள் தெரிவித்துள்ளதாவது: கடந்த 1984-ஆம் ஆண்டு, அரசு சார்பில் தங்களுக்கு வீடு கட்டுவதற்காக நிலம் ஒதுக்கப்பட்டு, அதற்கான பட்டாக்களும் வழங்கப்பட்டன. அப்போது பணியில் இருந்த தனி வட்டாட்சியர், "வீடுகளை கட்டி முடித்த பிறகு பட்டாக்களை ஒப்படைக்கிறோம்" என்று கூறி, மக்களிடமிருந்த பட்டாக்களைப் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, 1988-ஆம் ஆண்டு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. ஆனால், பலமுறை கோரிக்கை விடுத்தும் இன்றுவரை பட்டாக்கள் வழங்கப்படவில்லை. மொத்தம் உள்ள வீடுகளில் வெறும் 7 வீடுகளுக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு பட்டா வழங்க முடியாது என அதிகாரிகள் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, அவர் பட்டா வழங்க பரிந்துரை செய்தும், வருவாய்த் துறையினர் மற்றும் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நீண்ட காலமாக இழுபறியில் உள்ள இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், வரும் பிப்ரவரி 18, 2026 அன்று ஆறுமுகநேரியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பொதுமக்கள் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா தொடக்கம்: ஏப்ரல் 13ல் தேரோட்டம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:20:49 AM (IST)

பைக் மீது அரசு பேருந்து மோதல்: இளைஞர் பலி!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:00:53 AM (IST)

ஆட்சியர் காரை மறித்து அவதூறு பேசிய வாலிபர்; கார் பறிமுதல் – போலீஸ் விசாரணை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 7:56:38 AM (IST)

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)







