» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!

திங்கள் 16, பிப்ரவரி 2026 10:19:26 AM (IST)



தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீனவர் ஒருவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை.

தூத்துக்குடி லயன்ஸ் டவுன் 7-வது தெருவைச் சேர்ந்த ஜான்சன் (52) என்பவர், நேற்று மதியம் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு ஒன்றில் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கால் தவறி கடலுக்குள் விழுந்து உயிரிழந்தார்.

மறைந்த ஜான்சனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக சுமார் 272 விசைப்படகுகள் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஜான்சன் திருவுருவப் படத்திற்கு விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம், மீன்பிடி தொழிலாளர் சங்கம் உட்பட அனைத்து சங்க நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory