» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மினி லாரி கவிழ்ந்து விபத்து: சாலையில் சிதறிய 3 டன் தக்காளிகள்!!
திங்கள் 16, பிப்ரவரி 2026 8:34:04 AM (IST)

கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தக்காளி ஏற்றிச் சென்ற மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், சுமார் 3 டன் தக்காளிகள் சாலையில் கொட்டிச் சேதமடைந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து திருநெல்வேலிக்கு தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று புறப்பட்டது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (32) லாரியை ஓட்டினார். அவருடன் கனகராஜ் (31) என்பவர் உதவியாளராக (கிளீனர்) இருந்தார்.
நேற்று நள்ளிரவு கோவில்பட்டியைத் தாண்டி நாலாட்டின்புதூர் மேம்பாலத்தில் லாரி ஏறி இறங்கியபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறிய லாரி, சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி பலத்த சத்தத்துடன் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரியில் இருந்த சுமார் 3 டன் தக்காளிகள் சாலையில் கொட்டி நசுங்கின. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மோகன்ராஜ் மற்றும் உதவியாளர் கனகராஜ் ஆகிய இருவருக்கும் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன.
விபத்தின் காரணமாகத் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாலாட்டின்புதூர் காவல்துறையினர், மாற்றுப்பாதையில் போக்குவரத்தைச் சீரமைத்தனர்.
சாலையில் கவிழ்ந்த மினி லாரியைப் போலீசார் அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து போக்குவரத்து மீண்டும் சீரானது. இது குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா தொடக்கம்: ஏப்ரல் 13ல் தேரோட்டம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:20:49 AM (IST)

பைக் மீது அரசு பேருந்து மோதல்: இளைஞர் பலி!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:00:53 AM (IST)

ஆட்சியர் காரை மறித்து அவதூறு பேசிய வாலிபர்; கார் பறிமுதல் – போலீஸ் விசாரணை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 7:56:38 AM (IST)

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)







