» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவிலில் சிவராத்திரி விழா கோலாகலம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திங்கள் 16, பிப்ரவரி 2026 7:52:43 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீசங்கரா ராமேஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சுவாமிக்கு நேற்று மாலை சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அலங்கார தீபாரானை நடைபெற்றது. இந்தச் சிறப்பு வழிபாட்டில், உலக நன்மைக்காக சுமார் திருவிளக்குகள் ஏற்றப்பட்டு, அவற்றின் முன்பாக 204 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. திரளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு இந்தச் சிவலிங்கங்களுக்குப் பக்திப்பரவசத்துடன் பூஜை செய்தனர்.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் சிறுவர்களுக்கான இந்து சமய சான்றோர்கள் மாறுவேடப்போட்டி, தேவாரப்பாடல் இசைப்போட்டி, பரதநாட்டிய போட்டிகள் நடந்தன. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஓம் நமச்சிவாயம் எழுதினர் இவர்களுக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் பேனா, பால் பிஸ்கட் பேப்பர் வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா தொடக்கம்: ஏப்ரல் 13ல் தேரோட்டம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:20:49 AM (IST)

பைக் மீது அரசு பேருந்து மோதல்: இளைஞர் பலி!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:00:53 AM (IST)

ஆட்சியர் காரை மறித்து அவதூறு பேசிய வாலிபர்; கார் பறிமுதல் – போலீஸ் விசாரணை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 7:56:38 AM (IST)

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)







