» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.86.94 கோடி திட்டப்பணிகள் : நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி ஆய்வு
ஞாயிறு 15, பிப்ரவரி 2026 1:34:37 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி இன்று (15.02.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலம், ஹார்பர் கடற்கரையில் துறைமுக சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.8.00 கோடி மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் பூங்காவினையும், அய்யன் கோயில் பகுதியில் ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் எரிவாயு தகன மேடை கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார். மேலும், ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள விலங்குகள் கருத்தடை மையத்திற்கான (Animal Birth Control Centre) இடத்தினையும், கல்வி நிதியிலிருந்து ரூ.2.99 கோடி மதிப்பீட்டில் சிவந்தகுளம் பகுதியில் நடைபெற்று வரும் முதல்வரின் படைப்பாக்கம் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார். முத்துநகர் கடற்கரை வடக்கு பகுதியில் ரூ.4.01 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நீச்சல்குளத்தின் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, தருவைகுளத்தில் உள்ள மாநகராட்சி உரக்கிடங்கினைப் பார்வையிட்டு அங்கு மரக்கன்றுகளை நட்ட இயக்குநர், அங்கு வளர்க்கப்படும் பழக்கன்றுகளையும் பார்வையிட்டார். ஸ்டெம்பார்க் வளாகத்தில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டம் 2022-2023-ன் கீழ் ரூ.3.06 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ஏரி மேம்பாட்டுப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். மேலும், தூத்துக்குடி மாநகராட்சி, அம்பேத்கர் நகர் மற்றும் P&T காலனி கிழக்கு மெயின் ரோடு பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பகுதி சார்ந்த வளர்ச்சி அல்லாத பகுதிகளுக்காக செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் பிரதான கழிவு நீரேற்று நிலையத்திற்கான கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார். தனசேகரன் நகரில் ரூ.9.85 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட நூலகக் கட்டிடத்தின் பணிகளையும் அவர் நேரில் ஆய்வு செய்தார்.
மேலும், மாநில பேரிடர் தணிப்பு மற்றும் அபாய மேலாண்மை நிதியிலிருந்து ரூ.53.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பக்கிள் ஓடை விரிவுபடுத்தும் பணிகள் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.3.05 கோடி மதிப்பீட்டில் P&T காலனி மத்திய மெயின் ரோடு பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா, உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ்ராம், மாநகராட்சி நகரப் பொறியாளர் தமிழ்செல்வன், மாநகராட்சி செயற்பொறியாளர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா தொடக்கம்: ஏப்ரல் 13ல் தேரோட்டம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:20:49 AM (IST)

பைக் மீது அரசு பேருந்து மோதல்: இளைஞர் பலி!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:00:53 AM (IST)

ஆட்சியர் காரை மறித்து அவதூறு பேசிய வாலிபர்; கார் பறிமுதல் – போலீஸ் விசாரணை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 7:56:38 AM (IST)

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)







