» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அன்னை ஜூவல்லர்ஸ் சார்பில் இலவச மருத்துவ முகாம்
ஞாயிறு 15, பிப்ரவரி 2026 1:00:58 PM (IST)

தூத்துக்குடி அன்னை ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில், அண்ணா நகர் 10-வது தெருவில் உள்ள தங்கம்மாள் பள்ளியில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் பொதுமக்களுக்கு ஈ.சி.ஜி, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டன. தூத்துக்குடி இருதய மருத்துவமனை, அமெரிக்கன் மருத்துவமனை மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை ஆகியவற்றைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பொதுமக்களுக்குப் பரிசோதனைகளை மேற்கொண்டு உரிய மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அன்னை ஜூவல்லர்ஸ் இயக்குனர் செல்வராஜ், துணை நிர்வாக இயக்குனர்கள் ராஜேஷ் மற்றும் பிரபுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், அன்னை ஜூவல்லர்ஸ் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டு இம்முகாமின் மூலம் பயனடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா தொடக்கம்: ஏப்ரல் 13ல் தேரோட்டம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:20:49 AM (IST)

பைக் மீது அரசு பேருந்து மோதல்: இளைஞர் பலி!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:00:53 AM (IST)

ஆட்சியர் காரை மறித்து அவதூறு பேசிய வாலிபர்; கார் பறிமுதல் – போலீஸ் விசாரணை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 7:56:38 AM (IST)

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)







