» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றவாளிகளுக்கு ஜாமீன்: தமிழக அரசு மீது பகுஜன் சமாஜ் கட்சி குற்றச்சாட்டு!
ஞாயிறு 15, பிப்ரவரி 2026 8:55:48 AM (IST)
தமிழக அரசின் தலையீட்டால்தான் ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாகத் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சந்தியூர் ராசா பார்த்திபன் குற்றம் சாட்டியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணைப் பொதுச்செயலாளர் சந்தியூர் ராசா பார்த்திபன் கூறியதாவது: தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களும், சத்துணவு ஊழியர்களும் தங்களது கோரிக்கைகளுக்காகத் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு அவற்றைக் கண்டுகொள்ளாமல் மௌனம் காக்கிறது. அதேசமயம், தேர்தல் நேரத்தை முன்னிட்டு மக்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. இது மக்களை ஏமாற்றும் செயலாகும்.
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு ஐந்து முறை உச்சநீதிமன்றத்தில் தலையிட்டு அதற்குத் தடை வாங்கியது. அரசின் இத்தகைய போக்கால்தான் குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இதற்கு எதிராக நாங்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா தொடக்கம்: ஏப்ரல் 13ல் தேரோட்டம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:20:49 AM (IST)

பைக் மீது அரசு பேருந்து மோதல்: இளைஞர் பலி!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:00:53 AM (IST)

ஆட்சியர் காரை மறித்து அவதூறு பேசிய வாலிபர்; கார் பறிமுதல் – போலீஸ் விசாரணை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 7:56:38 AM (IST)

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)







