» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி திட்டங்கள் கலந்தாய்வு கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு!

சனி 14, பிப்ரவரி 2026 5:53:48 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் முன்னெடுப்பில் பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி குறித்து நிறுவன பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 19,53,668 ஆகும். மேலும் தமிழ்நாட்டின் உப்பு உற்பத்தியில் – 90 சதவீதமும், வாழைப்பழ உற்பத்தியில் தமிழ்நாட்டில் 2வது இடமும், மொத்த மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் 96.15 சதவீதத்துடன் முதலிடத்திலும், பனை மர உற்பத்தியில் மாநிலத்தில் 1வது இடமும் (1 கோடி மரங்கள்), பொது கட்டமைப்பு & பயன்பாடுகளில் 15வது இடமும், தனிநபர் வருமானத்தில் 8வது இடம் வகிக்கிறது நமது மாவட்டம்.

நிறுவனங்கள் சட்டம், 2013 (பிரிவு 135) படி, இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள் தங்களின் நிகர லாபத்தின் 2% தொகையை சமூகப் பொறுப்பு (CSR) திட்டங்களுக்கு செலவிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், 2026–27 நிதியாண்டிற்காக, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் 5 முக்கிய துறை சார்ந்த பகுதிகளில் முன்னுரிமைத் திட்டங்களை அடையாளம் கண்டுள்ளது. இத்திட்டங்கள் வாயிலாக சுமார் 9 லட்சம் பின்தங்கிய சமூக மக்கள் பயன்பெறுவர்.

அதேப்போல் முக்கிய துறைகளாக பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள், வனத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகிய துறைகள் வகிக்கின்றன.

மேலும், பள்ளிக் கல்வித் துறை சார்பாக மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்தும் வகையில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடம், ஆய்வக கட்டிடம், STEM ஆய்வகங்கள், ஸ்மார்ட் போர்டுகள் நிறுவுதல் மற்றும் கழிப்பறை கட்டிடம் உள்ளிட்ட வசதிகளும், உயர்கல்வித் துறை சார்பாக அரசு கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்பாடு செய்தல், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை புதுப்பித்தல் பணிகளும்,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக தேசிய சுகாதார பராமரிப்பு நிலையை அடைவதற்காக சுகாதார வசதிகளை புத்துயிர் பெறுதல், ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய புறநோயாளிகள் பிரிவுகள் மற்றும் மகப்பேறு மருத்துவப்பிரிவு கட்டுதல், சுகாதாரத்துறை அலுவலகத்தை மேம்படுத்துதல், ஆரம்ப சுகாதார நிலையங்களில் எக்ஸ்ரே மற்றும் மருத்துவ இயந்திரங்களை (X-Ray Table and Lead Barrier) மேம்படுத்துதல், இரண்டாம் நிலை பராமரிப்பு வசதிகளை முழுமையாக மேம்படுத்துதல், மூன்றாம் நிலை பராமரிப்புக்கான முக்கியமான மருத்துவ உபகரணங்களை வாங்குதல் உள்ளிட்ட வசதிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் மற்றும் உதவி சாதனங்கள், பெட்ரோல் ஸ்கூட்டர்கள், தள்ளுவண்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்றவையும்,

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் விவசாயிகளுக்கு பண்ணைக் குட்டை அமைத்தல், ஆழ்துளை கிணறுகளை புதுப்பித்தலும், கால்நடை பராமரிப்பு துறை சார்பாக தூத்துக்குடி கால்நடை மருத்துவமனை மற்றும் திருச்செந்தூரில் உள்ள கால்நடை மருந்தகம் கால்நடை பராமரிப்பு அலுவலகத்தில் நடைபாதை பேவர் ப்ளாக் சாலையாக அமைத்தல், கால்நடை மருந்தகளுக்கான ஸ்மார்ட் டி.வி நிறுவுதல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக சிறு பாசனத் தொட்டிகள் புதுப்பித்தல், வீட்டு வசதி (VGF), கிராம பஞ்சாயத்துகளில் கழிவு சேகரிப்பதற்காக மின்சார வண்டிகள் பயன்படுத்துதல், மரக்காப்புகள், 

பள்ளி கட்டிடம் மேம்பாடும், மகளிர் திட்டம் (Mahalir Thittam) சார்பாக முதலமைச்சரின் காலை உணவு திட்ட சமையலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட வசதிகளும் நகராட்சி நிர்வாகம் சார்பாக மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் Virtual and Augmented Reality ஆய்வகம், ஒருங்கிணைந்த விலங்கு பிறப்பு கட்டுபாட்டு (ABC) மையம், மாற்றுத்திறனாளிகளுக்கான பூங்கா, நகரப்புற அழகியல் மேம்பாட்டு முயற்சி, கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு முன்முயற்சிகளும், தூய்மையான நகராட்சி மற்றும் பசுமையான நகராட்சியாக மாற்றுவதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்ளுதல்,

காவல்துறை சார்பாக பொதுமக்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் ANPR / CCTV உள்ளிட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ளுதல், போக்குவரத்து மேலாண்மை மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்தல், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக முதியோர் இல்ல அடிப்படை வசதிகள் மேம்படுத்தல், புதிய தையல் சங்கங்களுக்கான உட்கட்டமைப்புகள் மற்றும் அங்கன்வாடி மைய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், குழந்தைகள் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பாக குழந்தைகள் இல்ல அடிப்படை வசதிகள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவு, வாழ்வாதார மேம்பாட்டுக்காக தொழில் கருவிகள் வழங்குதல் உள்ளிட்ட வசதிகளும்,

வனத்துறை சார்பாக சோலார் நீர் தொட்டிகள், குதிரைமொழி தேரியில் சுற்றுசூழல் சுற்றுலா வசதிகள் மேம்படுத்துதல், சாத்தான்குளம் தேரி எல்லை ஒருங்கிணைத்தலும், மீன்வளம் & மீனவர் நலத்துறை சார்பாக வாழ்வாதார ஆதரவு – வெளிப்புற மோட்டார்கள் வழங்குதல், மீனவர்களின் பாதுகாப்புக்காக சோலார் விளக்குகள், வலை சரி செய்யும் கூடங்கள், எஞ்சின் வசதியுடன் காற்று நிரப்பும் ரப்பர் படகுகள் ஏற்பாடு செய்தல் போன்ற வளர்ச்சி பணிகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கான பல்வேறு தேவைகள் குறித்து பெருநிறுவன பிரதிநிதிகளிடம் சமூக பொறுப்பு நிதியிலிருந்து தங்களது பங்களிப்பினை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதற்காக எந்தெந்த நிறுவனங்கள் எந்த துறைக்கு தங்களது பங்களிப்பினை அளிக்க உள்ளீர்கள் என்பது குறித்த கருத்துக்களையும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, இக்கூட்டத்தில் 2025-2026 நிதியாண்டில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு தங்களது சமூக பொறுப்பு நிதி பங்களிப்பு அளித்த நிறுவனங்களுக்கான பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார். மேலும், இன்றையதினம் நடைபெற்ற கூட்டத்தில் V.O.C port Trust, SPIC, NTPL, NTPC Green Energy Ltd, Vinfast, IREC, DCW, Nila Sea Foods, VVD, MOXI Power Ltd, Sanitation First உட்பட பல நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா, மாவட்ட வன அலுவலர் இளையராஜா, துணை காவல் கண்காணிப்பாளர் சுனில், உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ்ராம், துணை ஆட்சியர் (பயிற்சி) மகேந்திரன், பெறு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory