» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா: நான்கு கால சிறப்பு பூஜைகள் அறிவிப்பு!
சனி 14, பிப்ரவரி 2026 3:34:39 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் நளை (ஞாயிற்றுக்கிழமை) மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில், நாளை 15.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மகா சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்று இரவு முழுவதும் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
சிவராத்திரியின் முதல் கால பூஜை இரவு 09.00 மணிக்கு அபிஷேகத்துடன் தொடங்கி, 10.00 மணிக்கு தீபாராதனையுடன் நிறைவடையும். இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கால பூஜை இரவு 11.00 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 12.00 மணி வரையிலும், மூன்றாம் கால பூஜை அதிகாலை 01.00 மணி முதல் 02.00 மணி வரையிலும் நடைபெறும். இறுதி நிகழ்வாக நான்காம் கால பூஜை அதிகாலை 03.00 மணிக்குத் தொடங்கி 05.00 மணி வரை நடைபெறும்.
சிறப்புப் பூஜைகளைத் தொடர்ந்து, மறுநாள் அதிகாலை 05.30 மணிக்கு அர்த்தஜாம பூஜையும், 06.00 மணிக்கு திருவனந்தல் வழிபாடும், 06.30 மணிக்கு காலசந்தி பூஜையும் நடைபெற உள்ளன. மேலும் கோவில் கலையரங்கில் பக்தி சொற்பொழிவு, ஆன்மிக கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பூஜைகளை கோவில் தலைமை பட்டர் செல்வம், சண்முகம் பட்டர் ஆகியோர் நடத்துகின்றனர். விழா ஏற்பாடுகளை கட்டளைதாரர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது: 2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், பைக் பறிமுதல்!
புதன் 10, ஜூன் 2026 9:16:40 PM (IST)

சாலை விபத்தில் அரிசிக்கடை உரிமையாளர் பலி!
புதன் 10, ஜூன் 2026 8:20:13 PM (IST)

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
புதன் 10, ஜூன் 2026 4:53:29 PM (IST)

ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3பேர் கைது!
புதன் 10, ஜூன் 2026 4:48:08 PM (IST)

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
புதன் 10, ஜூன் 2026 4:32:10 PM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்!
புதன் 10, ஜூன் 2026 4:02:44 PM (IST)









